NAMMAI CHUTRI

                              நான் சொல்லுறேன்                       

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்

நான் ஸ்ரீதர் 

நம்மை சுற்றி பதிவுகளுக்கு உங்களை வரவேற்கிறேன்

     இதுல என்னடா புதுசா சொல்லிட போறான்னு பாக்குறீங்களா? பெருசா ஒன்னும் இல்லங்க நம்மள சுத்தி இருக்கிற விஷயங்களை எல்லாருக்கும் தெரியப்படுத்த இது என்னோட முதல் முயற்சி. 

சரி அத்யாவசிய தேவைல இருந்து ஆரம்பிக்கலாம். 

அத்தியாவசியம் என்ன? 

உணவு!!! 

சாப்பாடு தாங்க! அதிகபட்சம் மக்களுக்கு சாப்பாடு செஞ்சி சாப்பிட மட்டும் தான் தெரியும் (என்ன மாதிரி), விவசாயம் எனக்கு தெரியாது. தெரிஞ்சவங்களுக்கு வெளஞ்சது எனக்கு மட்டும் தான்னு எடுத்து வெச்சுக்க தெரியாது. அவங்களுக்கு என்னால முடிஞ்ச பதிவு இது உங்களால முடிஞ்சா அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

                                        உழவன் செயலி                                   



                    உழவன் செயலி தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை செயல்பாட்டின் கீழ் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டது. இது கூகிள் பிளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலி ஆகும்.


                                 CLICK OPEN BUTTON



பதிவிறக்கம் செய்தவுடன் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் முகவரியை உள்ளிட்டு தொடரவும் ,



மேற்கண்ட புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட ஐகானை கிளிக் செய்து மாவட்டம், துறை ஆகியவற்றை தேர்வுசெய்வதன் மூலம் நமது கிராமத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி ஆய்வாளர் அவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண் பெற்று அரசு சேவைகள் மற்றும் விவசாயத்துறைக்கு கிடைக்கப்பெறும் மானியங்கள் குறித்து அறிய இயலும்.



மேலும் பயிர் மற்றும் விதைகளுக்கான மானியங்கள், இயந்திரம் வழங்குவதற்கான மானியங்கள், விதை இருப்பு, உரம் இருப்பு, காய்கறி நாற்று வகைகள், பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் அறிய இயலும்.


இந்த செயலி மூலம் நாம் தெரிந்துகொள்ளும் செய்திகளை அறியாத விவசாயிகளுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துவது நம்மால் இயன்ற உதவியாக இருக்கும் நண்பர்களே, 
பகிருங்கள் செயலியை மட்டும் அல்ல, செய்திகளையும்!!!

 மரம் வளர்ப்போம்!!!                                                                 மழைபெறுவோம்!!!           
                                                                                   நன்றி                                                                     

Comments

Post a Comment